மருத்துவமனையில் பால், பிரட் வழங்கல்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில், ம.தி.மு.க., சார்பில் பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ம.தி.மு.க., முதன்மைச் செயலாளர் துரை வைகோ

பிறந்தநாள் விழாவையொட்டி பால், பிரட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பால், பிரட் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அருள், கணேஷ்குமார், ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் முனீர்கான், வழக்கறிஞரணி அமைப்பாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் சம்பத், முருகன், பாலாஜி, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement