தர்பூசணி விற்பனை 'விறுவிறு'

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மந்தமாக நடந்து வந்த தர்பூசணி விற்பனை சூடு பிடித்துள்ளது.

சங்கராபுரம் பகுதியில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் காலை முதல் மாலை வரை வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி ஆகியவற்றை பொதுமக்கள் அதிகம் வாங்கி சாப்பிட துவங்கி வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக சங்கராபுரம் கடைவீதியில விற்கும் தர்பூசணி விற்பனை அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ தர்பூசணி 15 ருபாய்க்கு விற்கப்படுகிறது.

வரத்தை பொருத்து, விலை குறைய வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement