பங்குனி உத்திர கொடியேற்று விழா

சங்கராபுரம்: சங்கராபுரத்தில், முருகன் கோவில்களில் பங்குனி உத்திர கொடியேற்று விழா துவங்கியது.

சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடக்கிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சங்கராபுரம் சன்னதி தெரு முருகன் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. வரும் 10ம் தேதி காலை பால் குட ஊர்வலம், தொடர்ந்து தீ மிதித்து, அலகு குத்தி காவடி ஊர்வலம் நடக்கிறது. இதே போல, காட்டுவனஞ்சூர் முருகன் கோவில், சங்கராபுரம் பூட்டை ரோடு முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர கொடியேற்று விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement