அரவக்குறிச்சி பகுதியில்திடீர் கோடை மழை


அரவக்குறிச்சி பகுதியில்திடீர் கோடை மழை


அரவக்குறிச்சி:கடந்த ஒரு மாதமாக, கடும் வெயில் நிலவி வந்த நிலையில், நேற்று காலை திடீரென பெய்த மழையால், அரவக்
குறிச்சி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்ப கட்டத்திலேயே, அரவக்குறிச்சி பகுதியில் அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் அதிகளவில் இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் அக்னி வெயில் காரணமாக, மேலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாத துவக்க நாளான நேற்று காலை, 10:45 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, 15 நிமிடம் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement