அரகண்டநல்லுார் கமிட்டியில் ரூ.85.6 லட்சம் வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், அறுவடை நிறைவால் வரத்து குறைந்துள்ளது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளைபொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி முதன்மையாது.

இங்கு சீசன் நாட்களில் ரூ. 2.5 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும்.

தற்பொழுது நெல், மக்காச்சோளம், மணிலா உள்ளிட்ட விளைபொருட்களின் அறுவடை நிறைவடையும் தருவாயில் இருப்பதால், நேற்று 2900 மூட்டை நெல்; 350 மூட்டை மக்காச்சோளம்; 140 மூட்டை எள்; 60 மூட்டை மணிலா; என குறைந்த அளவு, அதாவது 286.68 மெட்ரிக் டன் விளைபொருட்கள் மட்டுமே ஏலத்துக்கு வந்தன. இதன் மூலம் ரூ.85.6 லட்சம் வர்த்தகம் நடந்தது.

Advertisement