குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனற்று கிடக்கும் அவலம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனற்று கிடக்கும் அவலம்
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே, பெங்களூரு- - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஓட்டிய சிங்காரப்பேட்டையில், பஸ் ஸ்டாண்ட் உள்ளது.
இங்கு வரும் பயணிகள் மற்றும் சிங்காரப்பேட்டை, கென்னடி நகர், மேட்டுத்தெரு மற்றும் சுற்றுவட்டார மக்களின் தேவைக்காக, குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் கடந்த 2018 - 19ல் அமைக்கப்பட்டது.
இதன் மூலம், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 5 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இதனால் சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெற்றனர். சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, பழுதால் மூடப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.