100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்ஊதிய நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி: மத்திய அரசு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு தொழிலாளுக்கான நிலுவை தொகையை விடுக்கக்கோரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட, தர்மபுரி மாவட்ட சங்க ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார்.
இதில், தமிழகத்தில கடந்த நவ., டிச., ஜன., பிப்., மார்ச் மாதங்களில், 100 நாள் வேலை செய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு, 2,985 கோடி ரூபாய் வழங்காமல் உள்ள இருப்பு தொகையை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். மத்திய நிதிநிலை அறிக்கையில், வேலை அட்டைபெற்ற அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில், 4.5 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.
ஆண்டுக்கு, 200 நாள் வேலை, தின ஊதியமாக, 700 ரூபாய்- வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர். இதில், சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் மாதையன், அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மயிலம் முருகர் கோவிலில் பங்குனி உத்திர விழா துவங்கியது
-
பனைமரம் ஏறிய வாலிபர் தவறி விழுந்து பலி
-
கள் இறக்கிய நபர் கைது
-
தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி