பனைமரம் ஏறிய வாலிபர் தவறி விழுந்து பலி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பனைமரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தையை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் புஷ்பராஜ், 33; கூலித்தொழிலாளி. நேற்று மாலை கீழக்கொந்தை ஏரிக்கரையில் உள்ள பனைமரத்தில் ஏரி பனங்காய் பறிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் பட்ட அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்த வாலிபர் புஷ்பராஜின் கண்களை குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்த நிலையில் முண்டியம்பாக்கம் கண் வங்கி டாக்டர்கள் கண்காளை தானம் பெற்றனர். இச்சம்பவம் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement