அ.தி.மு.க., கூட்டம்


அ.தி.மு.க., கூட்டம்


ஓசூர்:ஓசூர் தெற்கு பகுதி, அ.தி.மு.க., சார்பில், தின்னுார் பகுதியில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. பகுதி செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம், மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர், வரும் சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர். ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், கவுன்சிலர் லட்சுமி ஹேமகுமார், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட தலைவர் சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement