மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை

மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி கட்ட பூஜை


கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் டவுன் பஞ்., ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில், 21.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வி.பள்ளிப்பட்டியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். இதில், அ.தி.மு.க, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் தனபால், கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement