தனியார் கல்குவாரியில் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
தனியார் கல்குவாரியில் கலெக்டர், எஸ்.பி., ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வடகரை அருகே தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இதனால் காற்று, தண்ணீர், ஒலி, மாசு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கிறது. இங்கு வாகனங்களால் சாலைகள் சேதமடைந்து வருகிறது என, கல்குவாரியை நிரந்தரமாக மூட அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகள் குவாரியை மூட ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். குவாரி தரப்பில் அங்குள்ள வீடுகளை அகற்ற பதில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி., ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று, வடகரை குவாரி உள்ள பகுதி மற்றும் குவாரியை ஒட்டிய வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை, மாவட்ட கலெக்டர் சதீஷ், எஸ்.பி., மகேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்து விசாரித்தனர். ஆய்வின் போது, அரூர் ஆர்.டி.ஓ., சின்னசாமி, டி.எஸ்பி., கரிகால் பாரிசங்கர், தாசில்தார் வள்ளி, கடத்துார் பி.டி.ஓ., ஜெகதீசன் உள்ளிட்ட அதிகாரிகள்
உடனிருந்தனர்.