பைக் திருட்டு 

கோட்டக்குப்பம்: ஆரோவில் பீச்சில் தனியார் கெஸ்ட் அவுஸ் மேலாளரின் பைக்கை திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வானுார் அடுத்த குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன், 25; ஆரோவில் பகுதியில் உள்ள தனியார் கெஸ்ட் அவுசில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 31ம் தேதி தான் வேலை செய்யும் விடுதியில் இருந்த சுற்றுலாப்பயணிகளை அழைத்துக்கொண்டு, ஆரோவில் பீச்சுக்கு வந்துள்ளார்.

அங்கு அவரது பைக்கை நிறுத்தி விட்டு, கடற்கரைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாக சுற்றுலாப்பயணிகளுடன் இருந்த அவர், திரும்பி வந்து பார்த்தபோது, அவரது பைக்கை காணவில்லை.

அவரது புகாரின் பேரில் போலீசார், அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement