இ.சி.ஆரில்., விபத்து மூவர் படுகாயம்

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே நள்ளிரவில் பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் மூவர் படுகாயமடைந்தனர்.

மரக்காணம் அருகேஉள்ள இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜா மகன் தயேந்திரன், 22. இவர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து கூனிமேடு நோக்கி யமாகா பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அன்னிச்சங்குப்பம் சோதனைச்சாவடி அருகே சென்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற டாடாமேன்சா காரும், தயேந்திரன் ஓட்டிச்சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாது. தயேந்திரன் படு காயமடைந்தார்.

இதே போன்று, அனுமந்தை கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் பிரகாஷ், 45; என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12;00 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து வீட்டிற்கு பல்சர் பைக்கில் சென்றபோது, அவரது பைக் தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் அவர் படுகாயமடைந்தார்.

மற்றொரு சம்பவம்



கூனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன், 31. இவர் புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து காலாப்பட்டு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஆரோவில் பீச் சந்திப்பில் வளைய முயன்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார், குருநாதன் மீது மோதியது. அதில் அவர் படுகாயமடைந்தார்.

மூன்று விபத்துக்களில் காயமடைந்தவர்களை கோட்டக்குப்பம் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துகள் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement