நா.த.க.,வினர் சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு



நா.த.க.,வினர் சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு


குமாரபாளையம்,:குமாரபாளையம் நா.த.க., சார்பில், அரசு மருத்துவமனை எதிரே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், தினசரி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், பஸ் ஸ்டாண்டிற்கு வருவோர், இந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் அருந்தி சென்றனர்.
திறப்பு விழாவின்போது, நீர்மோர், இளநீர், தர்பூசணி, அன்னாசி பழங்கள் வழங்கப்பட்டன. நகர பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, ராவண பிரபு பாலு, வீராசாமி, ஜெயபாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement