தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
தேசிய ஊரக தொழிலாளர்கள்வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்
நாமக்கல்,:நுாறு நாள் வேலை, அதற்கான கூலியை வழங்கக்கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய ஊரக தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், நுாறு நாள் வேலைத்திட்ட கூலியை மத்திய அரசு குறைக்கக்கூடாது. வேலை ஆட்களையும் குறைக்ககூடாது. அத்திட்டத்தை முடக்கக்கூடாது. வேலை செய்த அனைவருக்கும், கூலி பாக்கியை வட்டியோடு வழங்க வேண்டும். வேலை நாட்களை குறைக்காமல், தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும்.
ஒருநாள் ஊதியம், 700 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓராண்டிற்கான வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஒன்றிய தலைவர்கள் சண்முகசுந்தரம், வருதராஜி, சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாண்டியன், பூமாலை சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
-
திறக்கப்படாத தாவரவியல் பூங்கா பேட்டரி கார்களில் ஆடியோ செட் திருட்டு தண்டவாளங்கள் துருப்பிடித்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி
-
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது
-
குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய நிர்வாகிகள் கவர்னருடன் சந்திப்பு
-
ஸ்கூட்டி வழங்கல்
-
என்.ஆர்., காங்., பிரமுகர் பிறந்த நாள் விழா