காளியம்மன் கோவிலில்இன்று தேர் திருவிழா
காளியம்மன் கோவிலில்இன்று தேர் திருவிழா
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, பெரியமணலி கரிய காளியம்மன் கோவிலில், இன்று தேர் திருவிழா நடக்கிறது. கடந்த, 18ல், மாரியம்மனுக்கு கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 25ல், பூச்சாட்டப்பட்டது. 28ல், கிராமசாந்தி நடந்தது. 29ல், கொடியேற்றப்பட்டது.
நேற்று மாலை, 4:00 மணிக்கு, தீர்த்தகுடம் மற்றும் சக்தி அழைத்தல் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு பொங்கல் வைக்கப்படும். மாலை, 4:00 மணிக்கு, கரிய காளியம்மன் திருத்தேர் முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்படும். 3 மாலை 4:00 மணிக்கு, மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.
அதை தொடர்ந்து, 4 மாலை, 4:00 மணிக்கு, நாகேஸ்வரர், வேணுகோபால சுவாமி திருக்தேர் வடம் பிடிக்கப்படும். அன்று இரவு, 10:00 மணிக்கு, புஷ்பரதம் மற்றும் சிறப்பு நாதஸ்வர மேளக்கச்சேரி நடைபெறும். 5 இரவு, 9:00 மணிக்குமேல், சத்தாபரணம், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி பவனி நடக்கிறது. 6ல் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா முடிவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு, 3, 4, 5 தேதிகளில், கோவில் அருகே பாரம்பரிய மாட்டுச்சந்தை நடக்கிறது.
மேலும்
-
ரவுடிகளுக்காக போராடுவதா? நாராயணசாமிக்கு சபாநாயகர் கண்டனம்
-
தேசிய கூடைப்பந்து போட்டிக்காக மைதானம் தயார் செய்யும் பணி தீவிரம்
-
தேசிய அளவிலான டென்னிக்காய்ட் போட்டி: புதுச்சேரி வீரர்கள் பதக்கம் வென்று சாதனை
-
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஆட்ட நாயகனாக யுவராஜ் தேர்வு
-
உள்ளூர் கிரிக்கெட் போட்டி மாஸ்டர் பிளாஸ்டர் அணி வெற்றி
-
ராஜிவ்காந்தி கல்லுாரியில் விளையாட்டு போட்டி