பத்தாம் வகுப்பு மாணவியர் இருவர் கிணற்றில் மூழ்கினர்
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சதுப்பேரிபாளையம் விவசாயி மேகநாதன் மகள் மோனிஷா, 15. அதே பகுதி அண்ணாமலை மகள் சிவரஞ்சனி, 15. இருவரும் ஆரணி, தச்சூர் மேநிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தனர்.
இன்று, ஆங்கில பொதுத்தேர்வு நடப்பதால், நான்கு மாணவியர் சேர்ந்து, நேற்று மதியம், 1:00 மணியளவில், அப்பகுதி வயல்வெளியில் அமர்ந்து படித்தனர்.
அப்போது, மோனிஷா, சிவரஞ்சனி அங்குள்ள கிணற்றில் குளிக்க இறங்கினர். சேரும், சகதியுமாக இருந்த கிணற்றில் சிக்கி தவித்தனர்.
உடனிருந்த, மற்ற மாணவியர் கூச்சலிட்டதில், அக்கம்பக்கத்தினர் மாணவியரை மீட்க முயன்றும் முடியவில்லை. ஆரணி தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர். களம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கண்மாய் காப்போம் . . . : கண்மாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்
-
கருட வாகனத்தில் வீதி உலா வந்த கோதண்டராமர்
-
20 கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை
-
போக்சோ குற்றவாளிகள் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை
-
மாநிலத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் விரல் பதிவு செய்யலாம்
-
சேத்துார் வனப்பகுதி செக்போஸ்ட் செயல்படுமா
Advertisement
Advertisement