சேத்துார் வனப்பகுதி செக்போஸ்ட் செயல்படுமா

சேத்துார்: சேத்துார் வனப்பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள செக் போஸ்டை கோடை விடுமுறை தொடங்க உள்ள நிலையில் நடைமுறைக்கு கொண்டு வர விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேத்துாரிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் கோயில், பிராக் குடி ஆறு, வாழவந்தான் கண்மாய் பாசன பகுதி என 3 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளன.

இவற்றில் தென்னை, மா, பலா, கொய்யா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதி ஆறுகள் ஓடைகளில் மழை நீர்வரத்தின் போது அதிக அளவு ஆற்று மணல் செறிவு உள்ளதால்டூவீலர்களில் சட்டவிரோத மணல் கடத்தல் அதிகம். அத்துடன் விவசாய விளைப் பொருட்கள் திருட்டும் நடந்து வந்தது

மான், காட்டுப்பன்றி, முயல் வேட்டையில் ஈடுபடுபவர்களின் தொல்லையும் இருந்ததால் இப்பகுதியை கண்காணிக்க வேண்டி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் பிராக்குடி கண்மாய் அருகே கழிப்பறை கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதியுடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டிய போலீசார் தொடர்ந்து பணிஅமர்த்த படாததால் விவசாயிகள்சார்பில் செலவழித்தும்காட்சி பொருளாக உள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லுாரி விடுமுறை காலம் தொடங்க உள்ளதால் இளைஞர்கள்,மாணவர்கள் விவசாய விளை நிலங்களில் பெருமளவு சுற்றி வருவது அதிகரிக்கும்.

விவசாயி சோலையப்பன்: சமூக விரோதிகள் சிலர் மாணவர்கள் போர்வையில் விவசாய விளை பொருட்கள், மின் ஒயர், மோட்டார்களை திருடுவதும், இதை விவசாயிகளும் தட்டி கேட்க முடியாத நிலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே பகல் பொழுதிலாவது செக்போஸ்டில் போலீசை அமர்த்தி கண்காணிக்க வேண்டும்.

Advertisement