நலத்திட்டங்களுக்கு ஒதுக்கிய ரூ.5.34 கோடி... சரண்டர்; அரசு மெத்தனத்தால் விவசாயிகள் ஏமாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரால் கடந்தாண்டு பட்ஜெட்டில், விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியை திட்டமிட்டபடி செலவிடாததால்ரூ.5.34 கோடி சரண்டராகி உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள், மக்களின் செல்வாக்கை பெற்றிட ஒவ்வொரு பட்ஜெட்டின் போது, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்கிறது.
அந்த நிதியை அந்த நிதியாண்டிற்குள் குறிப்பிட்ட திட்டத்திற்கு செலவிட வேண்டும். இல்லை எனில், அந்த நிதி அரசுக்கு சரண்டராகிவிடும். அதனை தவிர்க்க, அரசு செலவிடப்படாமல் உள்ள நிதியை வேறு திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்துவிடுவது வழக்கம்.
மடை மாற்றம்
கடந்த 2024-25 நிதி ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் வேளாண் துறைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
அதில், பொதுமக்கள் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 'என் வீடு என் நிலம்'திட்டம், அரசு பள்ளிகளில் 'காய்கறி மற்றும் சத்துணவு தோட்டம்',மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாபியன்' திட்டத்தின் கீழ் விவசாயிகள், சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் நிறுவவழங்கப்படும் 30 சதவீத மானியத்தை 100 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து, இதற்காக ரூ.171.22 கோடி வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல்வர் அறிவித்தஇத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்க பணிகளைமேற்கொள்ளாமல் ஒதுக்கீடு செய்த நிதிகளை ஊழியர்களுக்க சம்பளம் உள்ளிட்டவற்றிற்காக மடை மாற்றம் செய்தனர்.
அதன்படி,விவசாயிகள் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப்செட் அமைக்கும் திட்டத்திற்குஒதுக்கீடு செய்த ரூ.6.11 கோடியைதிருந்திய வரவு செலவு மதிப்பீட்டில்ரூ.79.75 லட்சமாக குறைக்கப்பட்டது.
அதேபோன்று, இந்திய உணவுக் கழகத்திற்கு விவசாயிகள் விற்கும் நெல்லிற்கு கிலோவிற்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என, அறிவித்ததோடு, இத்திட்டத்திற்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களுக்கு மட்டும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நிதி செலவிடப்படாமல் இருந்தது. அதனை அறிந்தநிதித்துறை அதிகாரிகள் கடந்தடிசம்பர் மாதம் வெளியிட்டதிருத்திய வரவு-செலவு மதிப்பீட்டில், விவசாயிகளுக்கு நெல் விற்பனை மானியத்திற்காக ஒதுக்கீடு செய்த ரூ.6 கோடியை வேறு திட்டங்களுக்கு மாற்றம் செய்துவிட்டு, திட்டம் நடைமுறையில் உள்ளதாக கணக்கு காட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களுக்கு தலா ரூ.1,000 மட்டும் நிதி ஒதுக்கீடு செய்தனர்.
நிதித்துறை மறுப்பு
இவ்வாறு வேளாண் துறையில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மடை மாற்றம் செய்தது போக, ரூ.3.5 கோடி செலவிடப்பாமல் இருந்தது. அந்த நிதி சரண்டராவதை தடுத்திட, வேளாண் அதிகாரிகள் அவசர அவசரமாக வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 50 மாத நிலுவை சம்பளத்தை வழங்கிட கோப்புகள் தயாரித்து நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பினர். அந்த கோப்பிற்கு நிதித்துறை ஒப்புதல் அளிக்காமல் கடந்த நிதியாண்டின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு திருப்பிவிட்டது. இதனால், வேளாண் துறையில் எஞ்சியிருந்த ரூ.3.50 கோடி சரண்டராகிவிட்டது.
நிவாரணமும் பேச்சு
அதேபோன்று கடந்த நவம்பர் இறுதியில் வீசிய பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும், இதற்காக ரூ.1.84 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார்.
புயல் வீசி மூன்று மாதங்களாகியும் நிவாரணம் வழங்காததை கண்டித்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, விவசாய தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்கள் 14 ஆயிரம் பேருக்கு, மழைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு கோப்புகளை தயார் செய்து கடந்த 19ம் தேதி துறை செயலர், அமைச்சர் மூலமாக நிதித்துறைக்கு அனுப்பினர்.
கோப்பை ஆய்வு செய்த நிதித்துறை அதிகாரிகள், பயனாளிகள் பட்டியல் கடந்த 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டில் பலர் இறந்திருப்பர், பலர் வேறு வேலைக்கு சென்றிருப்பார்கள். மேலும், நிவாரணம் வழங்க விண்ணப்பம் பெறாதது ஏன் பல்வேறு கேள்விகளை எழுப்பி கோப்பை கடந்த 29ம் தேதி திருப்பி அனுப்பிவிட்டது. இதனால், விவசாய தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதி ரூ.1.84 கோடியும் செலவிட முடியாமல் சரண்டராகியுள்ளது.
அரசு அதிகாரிகளின் அலட்சியத்தினால், விவசாயகள், விவசாய தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதியை சரண்டராக்கி உள்ளது வேதனையளிக்கிறது.
மேலும்
-
டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்பில் வேலைவாய்ப்பு அதிகம்
-
5 லட்சத்துக்கும் அதிகமானோர் அடமானம் வைத்த நகைகள் மீட்பு
-
பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவு
-
முதல் நாளில் ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள், பெற்றோர்; பயனுள்ள உயர்கல்வி ஆலோசனைகளால் மகிழ்ச்சி, உற்சாகம்
-
சிவகங்கை கலெக்டர் ஏப். 21ல் ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
-
'தக்காளி காய்ச்சல்' அதிகரிப்பு: குழந்தைகள் மீது கவனம் அவசியம்