திண்டுக்கல்லில் ஏப்.4, 5ல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி; பிளஸ் 2க்கு பின் உயர்கல்வி படிப்புகள் என்ன, எங்கு படிக்கலாம்; நேரடி ஆலோசனைகள் தாராளம்; வழிகாட்டும் நிபுணர்கள் ஏராளம்

திண்டுக்கல் : பிளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் 'தினமலர்', கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 4, 5 ல் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பி.வி.கே.மகாலில் கோலாகலமாக நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 4, 5 ல் திண்டுக்கல் பி. வி.கே. மகாலில் நடக்கிறது. கல்வி கண்காட்சிகள், கருத்தரங்குகளும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் காலை 10:00 - மாலை 6:30 மணி வரை நடக்கிறது.

இரண்டு நாட்களிலும் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில் நீட், ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அன்ட் ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள், மெட்டாவர்ஸ், சி.எஸ்., ஐ.டி., டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங், கலை அறிவியல் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்ன, மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளும் வாய்ப்புகளும், சட்டம், சி.ஏ., படிப்பதால் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் விபரம், பிரத்யேக கல்வி நிறுவனங்கள் விபரம், கல்வி நிறுவனங்களில் உள்ள ஏராளமான கல்விப் பிரிவுகள், வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் என நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடி ஆலோசனை வழங்கவுள்ளனர்.

ஒரே இடத்தில் அனைத்து விபரங்களும்...



இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப் பிரிவுகள், அவற்றுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த அங்கேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம். கல்லுாரிகளுக்கான விண்ணப்பம் முதல் மாணவர்கள் சேர்க்கை வரையிலான அனைத்து நடைமுறைகளும், கல்விக் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட அனைத்து தகவல்கள், ஆலோசனைகள் ஒரே இடத்தில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லுாரிகளைத் தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் இங்கு கொடுக்கப்பட்டுள்ள QR Code ஸ்கேன் செய்து அல்லது 95667 77833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு RGN என்று டைப் செய்து அனுப்பவும். அனுமதி இலவசம்.

இந்நிகழ்ச்சிக்கு 'பவர்டு பை' பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது.

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜி., அன்ட் டெக்னாலஜி, கோவை கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.

Advertisement