தனி அடையாள எண் இன்று சிறப்பு முகாம்

உசிலம்பட்டி: விவசாயிகளின் நிலங்கள் தொடர்பான தகவல்களை மத்திய அரசின் அக்ரிஸ்டேக் தளத்தில் பதிவேற்றி தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை, கூட்டுறவு உள்ளிட்ட 13 துறைகளின் கீழ் மானியம் பெறுவதற்கும், இழப்பீடுகள் குறித்து விண்ணப்பிப்பதற்கும் இந்த தனி அடையாள எண் பெறவேண்டியது கட்டாயமாகும்.

இதற்கான சிறப்பு முகாம் உசிலம்பட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் இன்று (ஏப்.3) நடக்கிறது. இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் நிலங்கள் தொடர்பான சிட்டா, ஆதார், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குநர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Advertisement