திருவிழாக்கள்

மேலுார்: உறங்கான்பட்டி ராக்காயி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் 7 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று காலை மந்தை அருகே கோயிலில் துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் நாட்டாமுத்தி அய்யனார் ஊருணியை அடைந்தது. அங்கு முளைப்பாரி கரைக்க பட்டதுடன் திருவிழா நிறைவு பெற்றது.

காளியம்மன் கோயிலில் பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிறகு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement