கல்லுாரி விளையாட்டு நாள்

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி விளையாட்டு நாள் விழா நடந்தது. கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார் .முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். பொருளாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர், வெங்கடேஸ்வரன், மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தனர்.

உடற்கல்வி இயக்குனர் பொறுப்பு ரவீந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். கைத்தறி நகர் குப்பையன் ரத்னாமணி பள்ளித் தாளாளர் பரிசு வழங்கினார். ஓட்டப்பந்தயம், தொடரோட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், பேட்மின்டன், கேரம் உட்பட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். மாணவர் காசிமாயன், மாணவி வைஷ்ணவி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மதுரை காமராஜ் பல்கலை அணிகளில் பங்கேற்ற சவுராஷ்டிரா கல்லுாரி வீரர்கள், மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பரிசுகள் பெற்ற வீரர்கள் பாராட்டப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்லுாரி கல்வி விளையாட்டு குழு நிர்வாகிகள் பாரதி, கணேசன், ஜீவப்பிரியா, விஷ்ணுபிரியா, விக்னேஷ், செந்தில்குமார், ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் குபேந்திரன் தொகுத்துரைத்தார். பேராசிரியர் விஷ்ணுபிரியா நன்றி கூறினார்.

Advertisement