'வாரி வைந்தான்' ஆடும் பக்தர்கள்

கொட்டாம்பட்டி: பள்ளபட்டி, புதுப்பட்டியில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு மார்ச் 30 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் உள்ளனர். விரதம் இருக்கும் பக்தர்கள் வாரிவைந்தான் ஆடிச் சென்றனர்.

இதில் பங்கேற்ற பக்தர்கள் மஞ்சள் நிற வேட்டி, தலைப்பாகை அணிந்து, வேப்பிலை சொருகி, காலில் சலங்கை கட்டியும், பாட்டுப் பாடி, கையில் கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடிச்சென்றனர்.

அதில் மக்களிடம் காணிக்கை பெற்று விழா நடத்துவதாக நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வர். காப்பு கட்டி மூன்றாம் நாள் முதல் கொட்டாம்பட்டி, பொன்னமராவதி, பிரான்மலை பகுதிகளுக்கு சென்று மக்களிடம் காணிக்கை பெறுவர். அப்பணத்தைக் கொண்டு ஏப்.6ல் மல்லிகை பூக்களால் ஆன கரகம் எடுத்து மந்தை வழியாக கோயிலுக்கு செல்வர்.

அங்கு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். ஏப்.7 முதல் கரகத்தை கிணற்றில் கரைப்பதோடு திருவிழா நிறைவு பெறும்.

Advertisement