தொண்டியில் உயர்கல்வி தொடர முடியாமல் மாணவிகள் தவிப்பு

தொண்டி : தொண்டியில் அரசு பெண்கள் கலைக்கல்லுாரி இல்லாததால் மாணவிகள் உயர் கல்வி தொடர முடியாமல் தவிக்கின்றனர். தொண்டி பேரூராட்சியை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
பள்ளி இறுதி படிப்பை முடித்த பிறகு மேற்கல்வி கற்க திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் போக்குவரத்து செலவுகள் கூடுதலாகிறது. அதிலும் பெண் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இப்பகுதி மாணவிகள் உயர்கல்வி கற்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து த.மு.மு.க., மாநில செயலாளர் சாதிக்பாட்சா கூறியதாவது:
தொண்டி பகுதியில் விவசாயிகள், மீனவர்கள், கூலி வேலை செய்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். பெண்களை உயர்கல்வி கற்க வெளியூர் அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் மாணவிகள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இதனால் பெரும்பாலான மாணவிகள் உயர்கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்க தொண்டியை மையமாக வைத்து பெண்கள் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
இளம்பெண்கள் கர்ப்பப்பை பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
-
டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,!
-
உருவானது காற்றழுத்த தாழ்வு; தமிழகத்தில் ஏப்ரல்., 12ம் தேதி வரை மழை நீடிக்கும்!
-
கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!
-
சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்
-
'ஆரூரா... தியாகேசா' கோஷங்கள் முழங்க திருவாரூர் ஆழி தேரோட்டம் கோலாகலம்