சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்; இன்று ஒரு நாள் சஸ்பெண்ட்

9


சென்னை: சட்டசபை கூட்டம் நடக்கும்போது, முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சட்டசபையில் டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச வேண்டும் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கோரிக்கை விடுத்தார். இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். 'டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை பற்றி விவாதிக்க முடியாது.

Tamil News

சஸ்பெண்ட்



ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியபோது பேச அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, சட்டசபை கூட்டம் நடக்கும்போது, முதல்வர் பதவி விலக வலியுறுத்தும் பதாகையை காட்டியதால், அவையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இன்று (ஏப்ரல் 07) ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.





13 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்!



தமிழக சட்டசபையில் பதாகையை காட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் விவரம்:

அக்ரி கிருஷ்ணமூர்த்தி



அசோக்குமார்


சம்பத்குமார்


இசக்கி சுப்பையா


மரகதம்


அம்மன் அர்ஜூனன்



பொன் ஜெயசீலன்



செந்தில் குமார்



ஜெயக்குமார்



பாலசுப்பிரமணியம்



நல்லதம்பி


சித்ரா



மரகதம் குமரவேல்




பின்னர் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு பிரச்னையை கிளப்பி, அதற்கு பிறகு விவாதங்கள் நடைபெற்று, சபாநாயகர் ஒரு விளக்கம் தந்து, திருப்தி அடையாமல் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

அந்த தியாகி யார்?



அதே நேரத்தில் நான் சொல்ல விரும்புவது, கையில் பதாகையை ஏந்தி இருந்தார்கள்.
அதில்'அந்த தியாகி யார்...அந்த தியாகி யார்.... அந்த தியாகி யார்...என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தாங்கள் சிக்கி இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காக யாருடைய காலில் போய் விழுந்தார்.

நொந்து நூடுல்ஸ்



நொந்து போய் நூடுல்ஸ் ஆக இருக்கும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள். முதல்வர் பதவி வாங்குவதற்காக யாருடைய காலில் போய் விழுந்து, அந்த அம்மையாரை ஏமாற்றியவர் தான் இன்று தியாகி ஆக இருக்கிறார். தியாகிகள் என்று எழுதி பதாகைகளை கொண்டு வந்ததால், நான் இந்த விளக்கத்தை தருகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement