மன உளைச்சலில் அரசு அலுவலர் தற்கொலை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே, மன நிம்மதியின்றி தவித்த அரசு அலுவலர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலையை சேர்ந்தவர் கதிர்நிறைசெல்வன்,49; தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு தினங்களாக மன நிம்மதியில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள சித்தப்பா சண்முகம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement