கழிப்பறை சுவர் இடிந்து சிறுவன் பரிதாப சாவு

புவனகிரி; கழிப்பறை சுவர் இடித்து விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக இறந்தார்.

புவனகிரி அருகே மருதூர் எல்லைக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் விவசாயி, இவர மகன் அமிர்தம், 8; அங்குள்ள அரசு பள்ளிகள் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம், அப்பகுதியில் உள்ள பழுதடைந்த வீட்டின் பின்பக்கம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள கழிவறையின் சுவர் இடிந்து விழுந்ததில் அமிர்தம் பலத்த காயமடைந்தார்

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement