கண் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மந்தாரக்குப்பம்; நெய்வேலியில், ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி குழுமம் மற்றும் அலன் தொழிற்கல்வி நிறுவனம் இணைந்து கண் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

அலன் தொழிற்கல்வி நிறுவன புதிய கிளை நெய்வேலி இந்திரா நகரில் திறப்பு விழா நடந்தது. சென்னை, பாண்டிச்சேரி போன்ற பெரு நகரங்களை போன்று, நீட், ஜெ.இ.இ. மற்றும் ஐ.ஐ.டி., போன்ற பயற்சிகளை, கடலூர் மாவட்ட மாணவர்களும் வழங்க, ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக்குழுத்தோடு இணைந்து அலன் தொழிற்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. சிறந்த வல்லுநர்கள் மூலம் நெய்வேலி மற்றும் விருத்தாச்சலத்தில் பயிற்சி அளிக்க உள்ளனர்.

வகுப்புகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க உள்ள நிலையில், அலன் அலுவலகத்தின் புதிய கிளையை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஜெயசங்கர் திறந்து வைத்தார். பள்ளி இயக்குநர் தினேஷ், அலன் நிறுவன துணைத்தலைவர் மகேஷ் யாதவ், அலனின் கல்வித்துறை வல்லுநர்கள், ஜெயப்பிரியா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதை தொடர்ந்து, பார்வைத்திறன் குறைவு தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement