கொள்ளையடிக்க சதி திட்டம்; நெய்வேலியில் 5 பேர் கைது

நெய்வேலி ; நெய்வேலியில் கொள்ளையடிக்கும் சதி திட்டத்துடன் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பக்தவச்சலம், முருகன் மற்றும் போலீசார் நெய்வேலி நகர பகுதியில் உள்ள தைலம்தோப்பு பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்பகுதியில் 8 நபர்கள் முகத்தில் துணி கட்டிக் கொண்டு பட்டாக்கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன் பதுங்கியிருந்தனர்.
போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 5 பேர் பிடிபட்டனர். மூவர் தப்பியோடிவிட்டனர்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில்., நெய்வேலி அடுத்த வடக்கு மேலூர் காலனியை சேர்ந்த வீரப்பன் மகன் சந்துரு, 22; செட்டிக்குளம் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் மகன் டேவிஸ் பிரவீன், 29; வடக்கு மேலலுார் நடுத்தெருவை சேர்ந்த சக்கரபாணி மகன் பாடலீஸ்வரன், 25; வேல்முருகன் மகன் ஆகாஷ், 20; நெய்வேலி சி.ஆர்.காலனி பகுதி சேர்ந்த பாபு மகன் நவீன், 20; ஆகியோர் என, தெரியவந்தது.
அவர்கள், என்.எல்.சி., குடியிருப்பில் உள்ள அதிகாரி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியருந்ததை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து, 5 பேர் மீதும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தப்பியோடிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
ஓய்வு கிடைப்பதால் பீட் ஆபீசர்கள் நிம்மதி! ஷிப்ட் அடிப்படையில் போலீசாருக்கு பணி
-
செம்மொழி பூங்காவுக்குள் என்ன நடக்குது; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா