திருச்சோபுரம் கோவிலில் கொடியேற்றம்

புதுச்சத்திரம்; திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில் தேர் திருவிழா வரும் 10ம் தேதி நடக்கிறது.

திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 3ம் தேதி, 4, 5 ஆகிய தேதிகளில் சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.

6ம் தேதி திருவடைச்சான், 7ம் தேதி யானை வாகனத்தில் வீதியுலா, 8ம் தேதி மங்களாம்பிகை சமேத மங்களபுரீஸ்வரர் திருக்கல்யாணம், இரவு 9:00 மணிக்கு பரிவேட்டை, 9ம் தேதி குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. முக்கிய விழாவாக வரும் 10ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, மாலை 4.00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. 11ம் தேதி தெப்ப உற்சவம், 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.

Advertisement