போக்குவரத்து பாதுகாப்பு பேரிகார்டுகள் வழங்கல்

சின்னசேலம் : சின்னசேலத்தில் போக்குவரத்து பாதுகாப்பு பணிக்கு, 4 பேரிகார்டுகள் வழங்கப்பட்டன. சின்னசேலம் ராயல் டைல்ஸ் ஆண்டு கிரைனைட்ஸ் கடை சார்பில் போலீஸ் துறைக்கு போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு, பேரிகார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், மனோகரன், ஹபீப், குணசேகரன், பெருமாள், பழனிசாமி, கள்ளக்குறிச்சி வக்கீல் சங்க தலைவர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பேரிகார்டுகள் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு மூங்கில்பாடி சாலை மற்றம் சின்னசேலம் நகர நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டன.

Advertisement