ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்  

சிவகங்கை : பெரம்பலுார் மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து சிவகங்கையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் தனபால், கார்த்திக், இணை செயலாளர்கள் மலர்விழி, ேஷக் அப்துல்லா, சகிலா, சிவா, மாவட்ட தணிக்கையாளர் குமரேசன், பாண்டி பங்கேற்றனர்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளர் மீனா தலைமை வகித்தார். காளையார்கோவிலில் தலைவர் காளிமுத்து, சாக்கோட்டையில் தலைவர் ஜாகிர் உசேன், திருப்புத்துாரில் தலைவர் சரவணன், திருப்புவனத்தில் தலைவர் கருப்பு ராஜா, மானாமதுரையில் செயலாளர் ராஜேஸ்வரன், சிங்கம்புணரியில் தலைவர் பாண்டி செல்வம், தேவகோட்டையில் செயலாளர் கண்ணன், எஸ்.புதுாரில் நிர்வாகி கீதா, கல்லலில் தலைவர் அன்னலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement