சேவுகன் அண்ணாமலை கல்லுாரி நாள் விழா

தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி 54 ம் ஆண்டு கல்லுாரி நாள் விழா தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. தமிழ் துறை தலைவர் கண்ணதாசன் வரவேற்றார்.

முதல்வர் நாவுக்கரசு அறிக்கை வாசித்தார். கல்வியில் கல்லூரி, பல்கலை அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஐ.ஐ.டி.யில் சேர தேர்வு பெற்ற மாணவர் திலக் கவுரவிக்கப்பட்டார்.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை தமிழ் சங்க தலைவர் தங்கம் மூர்த்தி, முன்னாள் முதல்வர்கள் ராதாகிருஷ்ணன், முத்துராமன், முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ஆறுமுகம், தொழிலதிபர் ராமநாதன், தலைமை டாக்டர் செங்கதிர் பங்கேற்றனர். ஆங்கில துறை தலைவர் அருள்சாமி நன்றி கூறினார்.

Advertisement