சமைக்காத கோழிக்கறி சாப்பிட கொடுத்த பெற்றோர்: 2 வயது குழந்தை உயிரிழப்பு

15


விஜயவாடா: ஆந்திராவில் இரண்டு வயது பெண் குழந்தையின் பெற்றோர், சமைக்காத சிக்கன் துண்டை சாப்பிடக் கொடுத்ததால், பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆந்திராவில் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசராவ் பேட்டையை சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு கடந்த பிப்ரவரி 28ம் தேதி, அவரது பெற்றோர் ஒரு சிறிய துண்டு பச்சை சிக்கனை ஊட்டி உள்ளர். குழந்தையின் தந்தை ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் ஒரு இல்லத்தரசி.

சிக்கன் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, குழந்தைக்கு மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டன. பெற்றோர் முதலில் சிறுமியை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உயர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



மார்ச் 4ம் தேதி பறவைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை, மார்ச் 16ம் தேதி இறந்தார். மருத்துவ பரிசோதனையில் குழந்தை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்தது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் குண்டூரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் குழந்தைக்கு பறவை காய்ச்சல் இருந்ததை உறுதி செய்தது.


அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது. இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். சமைத்த கோழியை சாப்பிட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்.


குழந்தை சாப்பிட்ட சிக்கன் கடையில் இருந்து, சிக்கன் வாங்கி உண்கொண்ட மற்றவர்களின் ரத்த மாதிரியை சோதனை செய்தோம். யாருக்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கோழி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Advertisement