வருண் 'நம்பர்-3': ஐ.சி.சி., தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பவுலர் தரவரிசையில் இந்தியாவின் வருண் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 706 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (723 புள்ளி), 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.

மற்ற இந்திய வீரர்களான ரவி பிஷ்னோய் (7வது இடம், 674 புள்ளி), அர்ஷ்தீப் சிங் (10வது இடம், 653 புள்ளி) 'டாப்-10' பட்டியலில் நீடிக்கின்றனர். பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829), திலக் வர்மா (804), சூர்யகுமார் யாதவ் (739) முறையே 2, 4, 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (252) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். மற்ற இந்திய வீரர்களான அக்சர் படேல் (161), அபிஷேக் சர்மா (148) முறையே 12, 13வது இடத்தில் தொடர்கின்றனர்.

Advertisement