மீண்டும் ஜெயித்தது குஜராத்; பெங்களூரு அணி ஏமாற்றம்

பெங்களூரு: பிரிமியர் லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் அணி.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில், பீல்டிங் தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு பில் சால்ட், 'சீனியர்' கோலி ஜோடி துவக்கம் கொடுத்தது. அர்ஷத் கான் வீசிய 2வது ஓவரில், கோலி (7) அவுட்டாக, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வேகத்தில் மிரட்டிய சிராஜ், தேவ்தத் படிக்கல் (4), பில் சால்ட்டை (14) போல்டாக்கினார். பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதரை (12), இஷாந்த் சர்மா திருப்பி அனுப்பினார்.
மறுபக்கம் சாய் கிஷோர் சுழலில், ஜிதேஷ் (33) அவுட்டானார். மீண்டும் அசத்திய இவர், குர்னால் பாண்ட்யாவையும் (5) அவுட்டாக்கினார். 39 பந்தில் அரைசதம் கடந்த லிவிங்ஸ்டனை (54) சிராஜ் வெளியேற்றினார். டேவிட் (32), கடைசி பந்தில் போல்டானார். பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன் மட்டும் எடுத்தது. குஜராத் அணியின் சிராஜ் 3, சாய் கிஷோர் 2 விக்கெட் சாய்த்தனர்.
குஜராத் அணிக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் (14) ஜோடி துவக்கம் கொடுத்தது. சாய் சுதர்சன், 49 ரன்னில் அவுட்டாகினார். பட்லர், 31 பந்தில் அரைசதம் கடந்தார். கடைசியில் ஹேசல்வுட் பந்தில் ரூதர்போர்டு ஒரு சிக்சர் அடிக்க, குஜராத் அணி 17.5 ஓவரில் 170/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பட்லர் (73), ரூதர்போர்டு (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
வேலூர் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று சதம் அடித்தது வெயில்!
-
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகைக்கடை வைத்து கொடுத்து உதவிய அறக்கட்டளைக்கு பாராட்டு
-
முதல்வர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்; அண்ணாமலை
-
ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் அதிகாரி குற்றவாளி; பெண் போலீஸ் கொலை வழக்கில் தீர்ப்பு
-
அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு எதிராக போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: மத்திய அரசு ரூ.217 கோடி ஒதுக்கீடு