நக்சல்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்: அமித்ஷா

தாண்டேவாடா: '' நக்சலைட்கள் ஆயுதங்களை கைவிட்டால், மத்திய, மாநில அரசு பாதுகாக்கும். தவறினால், அவர்களை பாதுகாப்பு படையினர் கையாள்வார்கள்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: துப்பாக்கிச்சூட்டிற்கும், வெடிகுண்டுகள் வெடிப்பதற்கான நேரம் முடிவடைந்துவிட்டது. நக்சலைட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நக்சலைட் கொல்லப்படும் போது, இந்த பகுதியில் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. இந்த பகுதிக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. நக்சலைட்களை சரணடையச் செய்தால், அந்த கிராமங்கள் நக்சலைட் இல்லா கிராமம் என அறிவிக்கப்படுவதுடன், அக்கிராமம் வளர்ச்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்து உள்ளார். அனைவரும் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். உங்களை இந்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் பாதுகாக்கும்.
கடந்த மூன்று மாதங்களில் 521 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 881 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைபவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுவார்கள். ஆயுதங்களை தூக்குபவர்கள் ஆயுதப்படையினரால் கையாளப்படுவார்கள். பஸ்டர் பகுதியானது, பயத்திற்கானது என்ற நிலை மாறி, எதிர்காலத்திற்கானது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படும்.
முன்பு இந்த பகுதியில் இருந்து யாரும் பேச மாட்டார்கள். இங்கு யாரும் செல்ல வேண்டாம் என்றே கூறுவார்கள். ஆனால், தற்போது 50 ஆயிரம் ஆதிவாசி சகோதர, சகோதரிகளுடன் ராமநவமி மற்றும் அஷ்டமியை இந்த பகுதியில் கொண்டாடுகிறோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
அமித் ஷா பகிர்ந்த படம்!
சோலார் மேற்கூரையில் படுத்திருக்கும் சிறுவர்கள் மொபைல் போனில் விளையாடும் படத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார். 'சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் - சுக்மா பிராந்தியம், ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்தது. அச்சம் காரணமாக மக்கள் வெளியே வரவே அஞ்சிய காலம் இது. இப்போது, அங்குள்ள தோண்ட்ரா பஞ்சாயத்தில் சிறுவர்கள் மொபைல் போனில் அச்சமின்றி விளையாடுவதை காணும்போதும், இதயம் மகிழ்ச்சி கொள்கிறது. நம்பிக்கை, வளர்ச்சியை வெளிப்படுத்தும் இந்த படத்தை பகிர்வதில் மகிழ்ச்சி' என்று அவர் பதிவிட்டுள்ளார்





மேலும்
-
பாம்பன் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியீடு
-
கூடுதல் வரி விதிப்பு எதிரொலி: அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை நிறுத்திய ஜாகுவார்!
-
பு துச் சேரி ஆற்றில் படகு கவிழ்ந்தது சுற்றுலா பயணிகள் 10 பேர் உயிர் தப்பினர்; புதுச்சேரியில் பரபரப்பு
-
பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
-
போலீசிடம் தப்ப முயன்ற ரவுடிக்கு மாவு கட்டு
-
இறந்து கிடந்தவர் உடலை மீட்பதில் இரு மாநில போலீசார் குழப்பம்