ராம நவமி உபன்யாசம் இன்று முதல் துவக்கம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலில் இன்று முதல் வரும் 11ம் தேதிவரை உபன்யாசம் நடக்கிறது.

ராம நவமி உற்சவத்தையொட்டி, ஸ்ரீவேத ஆகம சம்ரக்ஷண லஷ்மி சரஸ் மாருதி ட்ரஸ்ட் சார்பில், ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் இன்று 3ம் தேதி முதல் வரும் 11ம் தேதிவரை தினசரி மாலை 7:30 மணி முதல் 8:30 மணிவரை சுந்தர காண்டம் தலைப்பில், ஓய்வு பெற்ற நீதிபதியான ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்கிறார்.

Advertisement