ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க உப்பளம் எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வு பெற இருப்பவர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படுகின்ற ஓய்வூதியத் தொகை மிக குறைவாக இருப்பதால் ஒருங்கிணைந்த ஓய்வு ஊதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மத்திய அரசின் ஆணையைப் பின்பற்றி புதுச்சேரி அரசாங்கம் இதுவரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.
ஏற்கனவே ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
மத்திய அரசு அறிவித்த -ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை போல் பலன் அளிக்கவில்லை என்றாலும் ஓரளவு நன்மை இருப்பதை கருதி- மத்திய அரசு அனுப்பிய அரசாணைக்கு ஒப்புதல் வழங்குவதன் மூலம் ஓய்வூதியர்களுக்கு ஓரளவு பலன் கிடைக்க நேரிடும்.
எனவே மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா ஏமாற்றம்
-
'கேரம் பால்' விஞ்ஞானி சாய் கிஷோர்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு