தேசிய அளவிலான அடிமுறை போட்டி: புதுச்சேரி வீரர்கள் சாதனை

பாகூர்: கன்னியாகுமரியில் நடந்த தேசிய அளவிலான அடிமுறை போட்டியில், 8 தங்கம், 10 வெள்ளி உள்ளிட்ட 24 பதக்கங்களை வென்று, புதுச்சேரி வீரர்கள், தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்திய வர்ம அடிமுறை சமேளனம் மற்றும் தமிழ்நாடு அடிமுறை சங்கம் இணைந்து, 7வது தேசிய அளவிலான அடிமுறை போட்டி, கன்னியக்குமாரியில், கடந்த 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது.
இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, டில்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில், 24 வீரர்களுடன் பங்கேற்று, புதுச்சேரி அடிமுறை சங்க அணி, ஒட்டு மொத்த புள்ளிகள் அடிப்படையில், தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
புதுச்சேரி வீரர்கள், 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கல பதக்கம் வென்று பெருமையை சேர்த்துள்ளனர். புதுச்சேரி அடிமுறை சங்க தலைவர் குமாரபாண்டியன், செயலாளர் அன்புநிலவன், பயிற்சியாளர் விஜயகுமார், பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
மேலும்
-
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா ஏமாற்றம்
-
'கேரம் பால்' விஞ்ஞானி சாய் கிஷோர்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா
-
அணி மாறுகிறாரா சூர்யகுமார்: மும்பை கிரிக்கெட் சங்கம் மறுப்பு