கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியில் ரெட்டியார்பாளையம் ஆர்.கே.சி.சி., அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

புதுச்சேரி, கரசூர் புல்ஸ் 11 கிரிக்கெட் கிளப் சார்பில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் போட்டிகள் அடிப்படையில் ரெட்டியார் பாளையம் ஆர்.கே.சி.சி., அணியும், புல்ஸ் 11 கிரிக்கெட் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து, நடந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய புல்ஸ் 11 அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 100 ரன்கள் எடுத்தது. புல்ஸ் 11 அணியின் செல்வா 21 ரன்கள் எடுத்தார். ஆர்.கே.சி.சி., அணியின் நாதன், கலை, பெலிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

பின்னர், ஆடிய ஆர்.கே.சி.சி., அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்.கே.சி.சி., அணியின் முருகன் 28 ரன்களும், பிரதீப் 25 ரன்களும் எடுத்தனர். புல்ஸ் 11 அணி ரவிக்குமார் 3 விக்கெட்கள் விழ்த்தினார்.

முதல் பரிசு வென்ற ரெட்டியார்பாளையம் ஆர்.கே.சி.சி., அணிக்கு கேடயம் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆர்.கே.சி.சி., அணியின் அருள் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Advertisement