கபடி போட்டியில் அரசு பள்ளி முதலிடம்

விழுப்புரம்: அனந்தபுரம் அரசு பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பிடித்தனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில், செஞ்சி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள், நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இப்போட்டியில், அனந்தபுரம் அரசு மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கபடி குழுவினர், வட்டார அளவிலான கபடி போட்டியில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று, சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்று வந்த மாணவர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன், உடற்கல்வி ஆசிரியர் யூஜின்சார்லஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியலுக்காக நீலகிரி மக்களை அலைக்கழித்த தி.மு.க.,: இ.பி.எஸ். குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 'அப்டேட்'
-
அ.தி.மு.க.,வுக்கு வி.சி.க., திருமாவளவன் பாராட்டு
-
சென்னையில் விதிகளை மீறி 10 மாடிகள் கட்டடம்; இடிக்கும் பணிகளில் இறங்கிய சி.எம்.டி.ஏ.
-
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்
-
மீனவர்கள், படகுகளை விடுவிக்கணும்; இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
Advertisement
Advertisement