அரசியலுக்காக நீலகிரி மக்களை அலைக்கழித்த தி.மு.க.,: இ.பி.எஸ். குற்றச்சாட்டு

சென்னை: அரசியலுக்காக நீலகிரி மக்களை, தி.மு.க., அலைக்கழித்தது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.
அவரது அறிக்கை:
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற லட்சிய எண்ணத்தை, 11 மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அதற்கு 447.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செயல்வடிவம் கொடுத்தது
அ.தி.மு.க., அரசு.
ஆனால், அ.தி.மு.க., ஆட்சியின் திட்டம் என்பதாலேயே, 4 ஆண்டு வேண்டுமென்றே ஆமை வேகத்தில் செயல்பட்டு, இன்று ஸ்டிக்கர் ஒட்டவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அ.தி.மு.க அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே; இருப்பினும், தி.மு.க.,வின் அரசியலுக்காக நீலகிரி மக்களை இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்திருக்க வேண்டாம்.
நாம் நடத்திய தமிழ்நாடு மாடல் ஆட்சியின் பெருமைமிகு சின்னங்களாக 11 மருத்துவக் கல்லூரிகளும் காலங்கள் கடந்து திகழட்டும்! நம்மைப் போன்றே அயராது மக்கள் சேவை ஆற்றட்டும்!
இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
மேலும்
-
டில்லி உஷ்ஷ்ஷ்: அடக்கி வாசிக்கும் கேரள பா.ஜ.,
-
சாலையை கடக்கும் பாதசாரிகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?
-
மின் வாரிய சிறப்பு முகாமில் 1,976 புகார் மனுக்களுக்கு தீர்வு
-
வக்ப் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு