தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 'அப்டேட்'

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 05) ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 05) ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஏப்ரல் 06) ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
மின் வாரிய சிறப்பு முகாமில் 1,976 புகார் மனுக்களுக்கு தீர்வு
-
வக்ப் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு
-
ஏ.ஐ., பயன்படுத்துங்கள்; பணியை எளிதாக்குங்கள்
-
பிரியாணி ஹோட்டலில் சோதனைக்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மாற்றம் கடமைக்கு கிடைத்தது தண்டனை
-
தணிக்கை உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு