நீர், மோர் பந்தல் திறப்பு: நலத்திட்ட உதவி வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 10 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
விழுப்புரம் காமராஜர் வீதி சந்திப்பில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி, நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, இளநீர், குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலர் புஷ்பராஜ், நகர செயலர் சக்கரை, நகர மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவரணி ராஜா, தொழிலாளரணி துணை அமைப்பாளர் ராஜா, நகர இளைஞரணி மணிகண்டன், கவுன்சிலர்கள் மணவாளன், பிரேமா முரளி, மணி, புருஷோத்தமன், அன்சர்அலி, நிர்வாகிகள் சண்முகம், ரஜினி கணேசன், ஜமாலுதின், முகமதுஅலி, தாகீர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், எல்லீஸ் சத்திரம் சாலை சந்திப்பு, பூந்தோட்டம், காந்திசிலை சந்திப்பு உட்பட 10 இடங்களில், லட்சுமணன் எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகளை வழங்கி, நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மேலும்
-
இந்திய வீரர்கள் அபாரம் * குத்துச்சண்டை உலக கோப்பையில்...
-
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா ஏமாற்றம்
-
'கேரம் பால்' விஞ்ஞானி சாய் கிஷோர்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்
-
வக்ப் மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ் கட்சியில் இருந்து எம்.பி.,க்கள் ராஜினாமா