கள்ளக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு மைதானம் தேவை இளைஞர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் பகுதியில், மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விளையாட்டு வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் இங்கு போதிய விளையாட்டு திடல்கள் இல்லை.
நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் மட்டுமே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கிரிக்கெட், இறகு பந்து, வாலிபால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்கு வசதியாக உள்ளது. பள்ளி கோடை விடுமுறை நாட்களில் மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை தனியார் விளையாட்டு ஆர்வலர்கள் அனுமதி பெற்று, பள்ளி மைதானத்தில் நடத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களும் பள்ளி மைதானத்தில் நடத்தப்படுகிறது.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் அவ்வப்போது ஒரு சிலர் மது அருந்துவது போன்ற விஷம செயல்களில் ஈடுபடுவதால் மைதானத்தை பயன்படுத்துவதில் அவ்வப்போது கடும் கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது.
இதனால் விளையாட்டு வீரர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் முறையான பயிற்சி பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, கையுந்து பந்து, கைப்பந்து, கூடை பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டு அரங்கத்துடன் மைதானம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே விளையாட்டு மைதானம் இடம் தேர்வு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி நகரையொட்டி புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் பகுதியில், மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அவ்வாறு அமைத்தால் கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்று வட்டார கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு பெரும் வசதியாக இருக்கும்.
மேலும்
-
சென்னை அணியில் மும்பை வீரர்
-
இந்திய வீரர்கள் அபாரம் * குத்துச்சண்டை உலக கோப்பையில்...
-
டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா ஏமாற்றம்
-
'கேரம் பால்' விஞ்ஞானி சாய் கிஷோர்
-
தர்பூசணி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: அன்புணி வலியுறுத்தல்
-
வக்ப் வாரிய பிரச்னையில் சிக்கிய 1800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்; ராஜ்யசபாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டம்