நாமக்கல் மாவட்டத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
ராசிபுரம்:ராசிபுரம் பகுதியில் நேற்று மதியம் ஆர்.புதுப்பாளையம், பட்டணம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, ஆர்.புதுப்பட்டி, தொப்பப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது. மேலும்
மங்களபுரம் உள்ளிட்ட பகுதி களிலும் லேசான துாறல் மழை பெய்தது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரை மணி நேரம் பெய்த மழையால், சாலை, வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வெப்பம் தணிந்து மாலை முழுவதும் குளிர்காற்று வீசியது.
ஆண்டுதோறும், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் விழா சமயத்தில் மழை பெய்வது வழக்கம். இந்தாண்டு ஆஞ்சநேயர் கோவில் தீ மிதிவிழா வரும் ஞாயிற்றுக்
கிழமை நடக்கவுள்ளது. இந்நிலையில் நேற்று மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* வெண்ணந்துார் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக மழையின்றி, வெயில் தாக்கம் காரணமாக மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று வெண்ணந்துார், ஓ.சவுதாபுரம், அலவாய்ப்பட்டி, அத்தனுார், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, தேங்கல்பாளையம், கட்டனாச்சம்பட்டி, கல்லாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
* நாமக்கல் நகரில் நேற்று காலை, 9:00 மணிக்கு திடீரென கோடை மழை பெய்தது. இதனால் பரமத்தி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், குட்டை தெரு, கோட்டை சாலை, கொண்டி
செட்டிபட்டி, ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காலையில் இரு
சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றோர் பாதிக்கப்பட்டனர். காலை நேரத்தில் மழை பெய்ததால், பல்வேறு பணிகளுக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் நனைந்த
படியே சென்றனர். அரை மணி நேரத்திற்கு மேலாக கோடை மழை பெய்தது. இதனால் சற்று வெயிலின் தாக்கம் குறைந்தது.
* இதேபோல் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
மேலும்
-
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 அதிகரிப்பு
-
உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்பிலான ராணுவ உதவி வழங்கிய ஐரோப்பிய நாடுகள்
-
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம்: ஸ்லோவாக்கியா பல்கலை கவுரவிப்பு
-
சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி; மொத்த வரி 145 சதவீதமாக அதிகரிப்பு
-
பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி
-
ஹால் டிக்கெட்டை பறித்துச் சென்ற கழுகு; கேரளாவில் அரசு பணித் தேர்வு எழுதச் சென்ற பெண் 'ஷாக்'!