பல்கலை பூப்பந்து போட்டி

மதுரை: அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான மாணவியர் பூப்பந்து போட்டி காரைக்குடி அழகப்பா பல்கலையில் நடந்தது. 65 பல்கலை அணியினர் பங்கேற்றனர். லீக் முறையில் நடந்த போட்டியில் சென்னை அண்ணா பல்கலை அணி முதலிடம், மங்களூர் பல்கலை அணி 2ம் இடம் பெற்றது. மதுரை காமராஜ் பல்கலை அணி 3ம் இடம், கேரளா மகாத்மா காந்தி பல்கலை 4ம் இடம் பெற்றன.

வெண்கல பதக்கம் வென்ற மதுரை காமராஜ் பல்கலை அணிக்காக லேடிடோக் கல்லுாரி மாணவிகள் ஆர்த்தி, ஜாஸ்லின், சமிதா ஸ்ரீ, ஜெய் பிரசன்னா, ரம்யாஸ்ரீ , ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி தீபா, தர்ஷினி, அனு பிரியா, பாத்திமா கல்லுாரி தரண்யா, மீனாட்சி அரசு கல்லுாரி ராகவி ஆகியோர் விளையாடினர். லேடிடோக் கல்லுாரி மாணவிகளை முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, உடற்கல்வி இயக்குநர்கள் சாந்த மீனா, ஹேமலதா, பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டினர்.

Advertisement