வில்பட்டி ஊராட்சிக்கு சுகாதாரமான குடிநீர்

கொடைக்கானல்: வில்பட்டி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் சரவணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கோவில்பட்டி மக்கள் கலங்களான குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக புகார் அளித்து அல்லி ஓடை தண்ணீர் வழங்க வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து சுகாதாரமான குடிநீர் சப்ளை செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தவிட்டார். இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.இதையடுத்து உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரன் தலைமையில் பி. டி. ஓ.,பிரபா ராஜமாணிக்கம் , உதவி பொறியாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் வில்பட்டி ஊராட்சி அல்லிஓடையில் குடிநீர் பைப் லைனை சீர் செய்து கோவில்பட்டி குடிநீர் தொட்டியில் சுகாதாரமான குடிநீரை கொண்டு சேர்த்தனர். கலெக்டர் சரவணன் துரித நடவடிக்கையால் வில்பட்டி ஊராட்சி கோவில்பட்டி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க, மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.மேலும் மன்னவனுாரில் குடிநீர் கலங்களாக வந்த நிலையில் சந்தனப்பாறை பகுதியில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

Advertisement